sivasiva.org
Search this site with
song/pathigam/paasuram numbers
Or Tamil/English words

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS   Gujarathi   Marati  Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

மூன்றாம் ஆயிரம்   திருமழிசை ஆழ்வார்  
நான்முகன் திருவந்தாதி  

Songs from 2382.0 to 2477.0   ( )
இயற்பா (2382.0)   தனியன்கள் (2382.1)  
Pages:    Previous   1  2  3  4  5  
விரைந்து அடைமின் மேல் ஒரு நாள் வெள்ளம் பரக்க
கரந்து உலகம் காத்து அளித்த கண்ணன் பரந்து உலகம்
பாடின ஆடின கேட்டு படு நரகம்
வீடின வாசற் கதவு       



[2461.0]
கதவு மனம் என்றும் காணலாம் என்றும்
குதையும் வினை ஆவி தீர்ந்தேன் விதை ஆக
நல் தமிழை வித்தி என் உள்ளத்தை நீ விளைத்தாய்
கற்ற மொழி ஆகிக் கலந்து    



[2462.0]
கலந்தான் என் உள்ளத்து காம வேள் தாதை
நலம் தானும் ஈது ஒப்பது உண்டே? அலர்ந்தலர்கள்
இட்டு ஏத்தும் ஈசனும் நான்முகனும் என்றிவர்கள்
விட்டு ஏத்த மாட்டாத வேந்து    



[2463.0]
வேந்தர் ஆய் விண்ணவர் ஆய் விண் ஆகி தண்ணளி ஆய்
மாந்தர் ஆய் மாது ஆய் மற்று எல்லாம் ஆய் சார்ந்தவர்க்குத்
தன் ஆற்றான் நேமியான் மால் வண்ணன் தான் கொடுக்கும்
பின்னால் தான் செய்யும் பிதிர்      



[2464.0]
பிதிரும் மனம் இலேன் பிஞ்ஞகன் தன்னோடு
எதிர்வன்;அவன் எனக்கு நேரான் அதிரும்
கழற் கால மன்னனையே கண்ணனையே நாளும்
தொழக் காதல் பூண்டேன் தொழில்    



[2465.0]
Back to Top
தொழில் எனக்குத் தொல்லை மால் தன் நாமம் ஏத்த
பொழுது எனக்கு மற்று அதுவே போதும் கழி சினத்த
வல்லாளன் வானரக் கோன் வாலி மதன் அழித்த
வில்லாளன் நெஞ்சத்து உளன்    



[2466.0]
உளன் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
தன் ஒப்பான் தான் ஆய் உளன் காண் தமியேற்கும்
என் ஒப்பார்க்கு ஈசன் இமை    



[2467.0]
இமயப் பெரு மலை போல் இந்திரனார்க்கு இட்ட
சமய விருந்து உண்டு ஆர் காப்பார் சமயங்கள்
கண்டான் அவை காப்பான் கார்க்கண்டன் நான்முகனோடு
உண்டான் உலகோடு உயிர்?    



[2468.0]
உயிர் கொண்டு உடல் ஒழிய ஓதும்போது ஓடி
அயர்வு என்ற தீர்ப்பான் பேர் பாடி செயல் தீரச்
சிந்தித்து வாழ்வாரே வாழ்வார் சிறு சமயப்
பந்தனையார் வாழ்வேல் பழுது    



[2469.0]
பழுது ஆகாது ஒன்று அறிந்தேன் பாற்கடலான் பாதம்
வழுவாவகை நினைந்து வைகல் தொழுவாரைக்
கண்டு இறைஞ்சி வாழ்வார் கலந்த வினை கெடுத்து
விண் திறந்து வீற்றிருப்பார் மிக்கு    



[2470.0]
Back to Top
வீற்றிருந்து விண் ஆள வேண்டுவார் வேங்கடத்தான்
பால் திருந்த வைத்தாரே பல் மலர்கள் மேல் திருந்தி
வாழ்வார் வரும் மதி பார்த்து அன்பினராய் மற்று அவற்கே
தாழ்வாய் இருப்பார் தமர்    



[2471.0]
தமர் ஆவார் யாவர்க்கும் தாமரைமேலாற்கும்
அமரர்க்கும் ஆடு அரவு ஆர்த்தாற்கும் அமரர்கள்
தாள் தாமரை மலர்கள் இட்டு இறைஞ்சி மால் வண்ணன்
தாள் தாமரை அடைவோம் என்று    



[2472.0]
என்றும் மறந்தறியேன் என் நெஞ்சத்தே வைத்து
நின்றும் இருந்தும் நெடுமாலை என்றும்
திரு இருந்த மார்பன் சிரீதரனுக்கு ஆளாய்
கரு இருந்த நாள் முதலாக் காப்பு    



[2473.0]
காப்பு மறந்தறியேன் கண்ணனே என்று இருப்பன்
ஆப்பு அங்கு ஒழியவும் பல் உயிர்க்கும் ஆக்கை
கொடுத்து அளித்த கோனே குணப்பரனே உன்னை
விடத் துணியார் மெய் தெளிந்தார் தாம்  



[2474.0]
மெய் தெளிந்தார் என் செய்யார்? வேறு ஆனார் நீறு ஆக
கை தெளிந்து காட்டிக் களப்படுத்து பை தெளிந்த
பாம்பின் அணையாய் அருளாய் அடியேற்கு
வேம்பும் கறி ஆகும் என்று    



[2475.0]
Back to Top
ஏன்றேன் அடிமை இழிந்தேன் பிறப்பு இடும்பை
ஆன்றேன் அமரர்க்கு அமராமை ஆன்றேன்
கடன் நாடும் மண் நாடும் கைவிட்டு மேலை
இடம் நாடு காண இனி      



[2476.0]
இனி அறிந்தேன் ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம்
இனி அறிந்தேன் எம் பெருமான் உன்னை இனி அறிந்தேன்
காரணன் நீ கற்றவை நீ கற்பவை நீ நல் கிரிசை
நாரணன் நீ நன்கு அறிந்தேன் நான்



[2477.0]


Other Prabandhams:
    திருப்பல்லாண்டு     திருப்பாவை     பெரியாழ்வார் திருமொழி     நாச்சியார் திருமொழி         திருவாய் மொழி     பெருமாள் திருமொழி     திருச்சந்த விருத்தம்     திருமாலை     திருப்பள்ளி எழுச்சி     அமலன் ஆதிபிரான்     கண்ணி நுண் சிறுத்தாம்பு     பெரிய திருமொழி     திருக்குறுந் தாண்டகம்     திரு நெடுந்தாண்டகம்     முதல் திருவந்தாதி     இரண்டாம் திருவந்தாதி     மூன்றாம் திருவந்தாதி     நான்முகன் திருவந்தாதி     திருவிருத்தம்     திருவாசிரியம்     பெரிய திருவந்தாதி     நம்மாழ்வார்     திரு எழு கூற்றிருக்கை     சிறிய திருமடல்     பெரிய திருமடல்     இராமானுச நூற்றந்தாதி     திருவாய்மொழி     கண்ணிநுண்சிறுத்தாம்பு     அமலனாதிபிரான்     திருச்சந்தவிருத்தம்    
This page was last modified on Tue, 27 Feb 2024 03:10:03 +0000
 
   
    send corrections and suggestions to admin @ sivasiva.org   https://www.sivaya.org/divya_prabandham_song.php?prabandham=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF&order=%20sequence_no%20&orderby=%20asc&lang=tamil&offset=80&limit=20&page=5;